சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி
By திருவள்ளூர், | Published on : 09th September 2014 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி வகுப்பு வேப்பம்பட்டில் நடைபெற்றது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசுப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு 3 நாள்கள் மேலாண்மைப் பயிற்சி வகுப்பு வேப்பம்பட்டில் உள்ள பஜ்ரங் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.
நிகழ்வுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் நேரு முன்னிலை வகித்தார். மாவட்ட பள்ளிகளின் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரியின் தலைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் பேசியது: சமூக அறிவியல் பாடம் முக்கியமான ஒரு பாடம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத நினைக்கும் அனைவரும் சமூக அறிவியல் பாடத்தையே தேர்வு செய்கின்றனர்.
ஆகையால், இந்த பாடத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் என்றார் அவர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.