Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாரத்தான் ஓட்டம் - Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாரத்தான் ஓட்டம்

    By செங்குன்றம்  |   Published on : 09th September 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை "டிர்க்கிங் கிளப்' சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளைஞர்களின் உடல் நலம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டம் செங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அலமாதி கோஜான் பொறியியல் கல்லூரி திடலில் இந்த ஓட்டத்தை கல்லூரியின் செயலாளர் ஏ.பாபு தொடங்கி வைத்தார்.

    முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 1300 பேர் இதில் பங்கேற்றனர்.

    மொத்தம் 21 கிலோமீட்டர் ஓடிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் ஓட்டத்துக்காக ரூ.500 வீதம் வசூலிக்கப்பட்ட தொகை, மணலியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai