சுடச்சுட

    

    செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 09th September 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியபாளையம் அருகே உள்ள 82-பனபாக்கத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் கடந்த சில நாள்களாக சிறப்புப் பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

    இதனைத்தொடர்ந்து, திங்கள்கிழமை யாகசாலை பூஜை, யாகங்கள் நடைபெற்றன. பின்னர், பூஜிக்கப்பட்ட புனித நீர் ஆலயங்களின் கோபுரக் கலசங்களில் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஓம் ஸ்ரீ செல்லியம்மன், நாகாத்தம்மன், லட்சுமி கணபதி, கங்கையம்மன், வள்ளியம்மன், பவானியம்மன், துர்க்கை அம்மன், சீரடி சாய்ராம், நவக்கிரகங்களுக்கு பால், தயிர், வெண்ணெய், மோர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்பட்டன.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவராஜ், முன்னாள் தலைவர் தேவகிரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai