Enable Javscript for better performance
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா?

    By திருத்தணி  |   Published on : 09th September 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணி காந்தி சாலையில் போதிய இட வசதி இல்லாமல் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.

    இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் திருத்தணி, சுற்றுப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுக்காக வந்து செல்கின்றனர்.

    பேருந்து வசதி இல்லை: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வட்டாட்சியர் அலுவலகம் வழியாகதான் அரசு, தனியார் பேருந்துகள் செல்கின்றன.

    ஆனால், வட்டாட்சியர் அலுவலகம் அருகே எந்த பேருந்தும் நின்று செல்வது கிடையாது. இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் முதியோர், பெண்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள், வட்டாட்சியர் அலுலகத்துக்கு சவாரி செல்ல அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

    இந்நிலையில், புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டாகியும், இன்றளவும் அங்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    எனவே, திருத்தணி வட்டாச்சியர் அலுவலகம் வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் அலுவலகம் முன்பு நின்று செல்லவும், அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai