சுடச்சுட

  

  நகைக் கடை உரிமையாளரை வெட்டி பணம் பறிக்க முயற்சி

  By திருவள்ளூர்,  |   Published on : 09th September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அருகே நகைக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த உரிமையாளரை வெட்டிப் பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  திருவள்ளூரை அடுத்த திருமழிசையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). இவரது தம்பி தினேஷ்குமார் (36).

  இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நகைக் கடை வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் வழக்கம் போல கடையைப் பூட்டினர்.

  கடையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதே நெடுஞ்சாலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வினோத்குமார் புறப்பட்டார்.

  அவரது தம்பி தினேஷ்குமார் நடந்து சென்றார். வினோத்குமார் தனது வீட்டருகே சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கத்தியால் அவரின் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி, பணப்பையைப் பறிக்க முயன்றனர்.

  அதற்குள் தினேஷ்குமார் ஓடி வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் தப்பினர். இதில், பலத்த காயம் ஏற்பட்ட வினோத்குமார், சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai