Enable Javscript for better performance
பள்ளியில் உலக எழுத்தறிவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    தலக்காஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தாஸ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ராமன், சகுந்தலா, சவீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து வயதினரும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக "எழுத்தறிவு இல்லாத வீடு இருண்ட வீடு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து, கையெழுத்து போடத்தெரியாத தங்களின் பெற்றோருக்கு கையெழுத்திட கற்றுக்கொடுப்பது என ஒவ்வொரு மாணவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் நிவேதா, கோதண்டபாணி, கோட்டீஸ்வரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai