சுடச்சுட

  

  பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் அபராதம்

  By ஊத்துக்கோட்டை  |   Published on : 09th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இப் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பதைத் தடுக்கும் பொருட்டு, அதாவது கடந்த ஆண்டு 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட கவர், டம்ளர் முதலியவற்றை விற்பதும், பயன்படுத்துவதும் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இருப்பினும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை அவ்வப்போது பேரூராட்சி ஊழியர்கள் அகற்றியும் வருகின்றனர்.

  இதனை நிரந்தரமாக தடுக்கும் பொருட்டு, வியாபாரிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர் முதலிய பொருள்களை வியாபாரிகள் பயன்படுத்தவும், விற்கவும் கூடாது.

  பேரூராட்சிப் பகுதிகளில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 டன் வரை குப்பைகள் சேர்வதாகவும் அவற்றில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதில் கடினமாக உள்ளது.

  எனவே குப்பைகளை தரம் பிரிக்க பேரூராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு 2 குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும்.

  மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  இவை கழிவு நீர் கால்வாய்களில் விழுவதால், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

  இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி ஆகி, நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. மேலும் குடிநீர் மாசுஅடைந்து, பிற்காலத்தில் குடிநீர் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

  இதனை கருத்தில் கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதை ஒரு வாரத்துக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  மீறி அவ்வாறு விற்கும் வியாபாரிகள் மீது அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

  கூட்டத்துக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஷேக் தாவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai