சுடச்சுட

    

    மாதவரம் அருகே பெண்ணிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கொளத்தூர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். இவரது மனைவி ஆலிஷ் (58).

    இவர்கள் இருவரும், தங்களின் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் செங்குன்றம் சென்றுவிட்டு மாலை திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மாதவரம் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், ஆலிஷ் கழுத்திலிருந்த 12 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai