சுடச்சுட

    

    போலீஸாரை கண்டித்து சாலை மறியல்: பாஜகவினர் கைது

    By பூந்தமல்லி,  |   Published on : 09th September 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக வேட்பாளரை தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குன்றத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

    நடைபெறவுள்ள உள்ள இடைத்தேர்தலில் பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் ராம்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குன்றத்தூர் அருகே ராம்குமாரை அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராம்குமார் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

    இதனைக் கண்டித்து, குன்றத்தூர் காவல் நிலையத்தை ஏராளமான பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

    பின்னர், குன்றத்தூர் - சோமங்கலம் சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai