சுடச்சுட

  

  திருவள்ளூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 210 மனுக்கள் பெறப்பட்டன.

  திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். முதியோர், விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்கள், பட்டா கோரி 64 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 14 மனுக்கள், நியாயவிலை அட்டை கோரி 14 மனுக்கள், பல்வேறு உதவிகள் கோரி 80 மனுக்கள் உள்பட மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன.

  இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இரு நபர்களுக்கு காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரந்தாமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai