சுடச்சுட

    

    முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசுத்தொகை

    By திருவள்ளூர்,  |   Published on : 09th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2013-14-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

    எனவே, 2013-14-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரரின் பிள்ளைகள், அதற்கான ஆவணங்களுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் என்ற முகவரியில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தேவையான ஆவணங்கள்: மாணவரின் தாய், தந்தை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்தவராக இருப்பதற்கான ஆவணம்.

    2013-14 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றமைக்கான மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், முன்னாள் படைவீரர் படைப் பணிச்சான்று, அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai