சுடச்சுட

  

  48 பேர் போட்டியின்றித் தேர்வு: 2 பாஜக வேட்பாளர்கள் வாபஸ்

  By திருவள்ளூர்,  |   Published on : 09th September 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 68 பதவியிடங்களில், 48 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த நிலையில் நகராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 68 பதவியிடங்களில், 48 பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  மற்ற 20 காலிப் பதவியிடங்களுக்கு 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டு கவுன்சிலர் பதவி, பூண்டி ஊராட்சி ஒன்றிய 14-ஆவது வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவும், பாஜகவும் வேட்புமனு தாக்கல் செய்தன.

  இதையடுத்து இருவருக்கும் நேரடிப் போட்டி நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் பாஜகவினர் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் அரண்வாயல், ஏடூர், பூனிமாங்காடு, இலுப்பூர், கன்னிகைப்பேர், திருமால்ராஜ்பேட்டை, மொன்னவேடு ஆகிய 7 ஊராட்சித் தலைவர்கள் பதவி, 39 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

  இறுதி நிலவரப்படி இந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் 20 பதவிகளுக்கு 61 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அஸ்வரேந்தபுரம், கீழானூர், நரசிங்கபுரம், திருமணம், ஏ.என்.குப்பம், அனுப்பம்பட்டு ஆகிய 6 ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 25 பேர் போட்டியில் உள்ளனர்.

  மேலும் காலியாக உள்ள 14 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 பேர் போட்டியில் உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai