சுடச்சுட

  

  குண்டும், குழியுமாக உள்ள பொன்னேரி பேருந்து நிலைய சாலையை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பொன்னேரி தேரடியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் இந்தச் சாலை பேரூராட்சிப் பராமரிப்பில் உள்ளது.

  சிமென்ட் சாலையான இது, ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறி உள்ளது. புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்தச் சாலை வழியேதான் சென்று வர வேண்டும்.

  அந்தப் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் சாலையை இதுவரை சீர் செய்யாமல் உள்ளது.

  இதனால் இந்தச் சாலை வழியே செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  எனவே பொதுமக்கள் நலன் கருதி பொன்னேரி புதிய பேருந்து நிலைய சாலையை விரைந்து சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai