சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் திங்கள்கிழமை கொதிகலன் வெடித்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த ஆலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், திடீரென கொதிகலன் பகுதியில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் வெடித்து அதிலிருந்து தீப்பிழம்புகள் வெளியே தெரித்தது.

    இதில், பாய்லர் அருகில் வேலை செய்து கொண்டிருந்த கிரேன் இயக்குபவர்களான பிகார் மாநிலத்தைச் சேர்ந்த திரேந்தர்(30), உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பட்டு சௌத்ரி (30) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர்.

    இதையடுத்து, அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை திரேந்தர் உயிரிழந்தார்.

    இந்நிலையில், விபத்து நடந்த தொழிற்சாலையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலுசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீஸார் தொழிற்சாலையின் பொது மேலாளர் சைலேந்திரநாத் மிஸ்ரா (48), நிர்வாக அலுவலர் ராஜூ(57), மேற்பார்வையாளர் சங்கர் சஹானி (53) ஆகியோரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai