சுடச்சுட

    

    வெங்கல் அருகே நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

    ஊத்துக்கோட்டையை அடுத்த வெங்கல் அருகே தலக்காஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (37). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த சனிக்கிழமை காலையில் தாமரைப்பாக்கத்தில் இருந்து தலக்காஞ்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    கரிகிலாவாக்கம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளி சாலை நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஷை வெங்கல் போலீஸார் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்: வெங்கல் அருகே வண்டிக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதாம்பாள் (65). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai