சுடச்சுட

  

  சென்னைக்கு குடிநீர் செல்லும் இணைப்புக் கால்வாயின் இருபுறங்களிலும் கரைகளில் மண்டிக் கிடக்கும் புதர்களை விரைவில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சென்னைக் குடிநீரின் முக்கிய ஆதாரமான ஏரிகளின் ஒன்றாக விளங்கும் பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம் (புழல்), சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்படுகிறது.

  இந்த தண்ணீர், அந்த உப ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

  இந்நிலையில், இணைப்புக் கால்வாய் செவ்வாப்பேட்டை சிறுகடல் கிராமம் அருகே இரண்டாக பிரிந்து ஒரு கால்வாய் செங்குன்றத்துக்கும், மற்றொரு கால்வாய் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் செல்கிறது. இந்நிலையில், கண்டலேறு தண்ணீரின் வரத்தால் தற்போது பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து இணைப்புக் கால்வாய் வழியாக செங்குன்றம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

  இதனை விரைவில் நிறுத்தி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாப்பேட்டை - அரண்வாயல் இடையே இணைப்புக் கால்வாயின் இரு கரைகளிலும் முள்புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், பல இடங்களில் கால்வாய் கரை உடைந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

  விரைவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் தண்ணீரின் சேதார அளவை குறைக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai