சுடச்சுட

  

  ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

  By DN  |   Published on : 10th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆர்.கே.பேட்டை அருகே கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்டது பொந்தாலக்கண்டிகை கிராமம். இந்த கிராமத்தில் பாழடைந்த கிணற்றின் மேல் பகுதியில் 2 பேர் அமர்ந்து கொண்டிருந்தனர்.

  அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே.பேட்டை போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரிடமும் விசாரித்தனர்.

  அப்போது கிணற்றில் இருந்து 5 பேர் திடீரென ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கிணற்றில் இறங்கி பார்த்தபோது, அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து போலீஸார் அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

  இதில் தொடர்புடைய திருத்தணியைச் சேர்ந்த தினேஷ் (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அனந்தநாராயணன் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai