சுடச்சுட

    

    அத்திப்பட்டு ஊராட்சித் தலைவர் வெட்டிக் கொலை

    By பொன்னேரி,  |   Published on : 11th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சித் தலைவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ளது அத்திப்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தவர் குருமூர்த்தி (45).

    இவர் இரண்டாவது முறையாக அத்திப்பட்டு ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார். இந்நிலையில் குருமூர்த்தி, புதன்கிழமை இரவு அத்திப்பட்டில் தான் புதிதாக கட்டிவரும் வீடு அருகே நின்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு காரில் வந்த 15-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் குருமூர்திதியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த குருமூர்த்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai