Enable Javscript for better performance
ஏடூர் ஊராட்சித் தலைவராக விஜயன் போட்டியின்றித் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஏடூர் ஊராட்சித் தலைவராக விஜயன் போட்டியின்றித் தேர்வு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 11th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சிமன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலில் அதிமுக உறுப்பினர் பி.விஜயன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஏடூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்த கோதண்டன் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஏடூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏடூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.விஜயன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அதிமுக உறுப்பினர் பி.விஜயன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடுவிடம் விஜயன் ஆசிபெற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai