சுடச்சுட

    

    கடத்தப்படவிருந்த ஒரு டன் செம்மரங்கள் பறிமுதல்

    By திருத்தணி,  |   Published on : 11th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த ஒரு டன் செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதியில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், திருவாலங்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸார் புதன்கிழமை பூனிமாங்காட்டை அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த மோட்டார் சைக்கிளை போலீஸார் மடக்கியபோது, அதில் வந்த நபர் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், பின்னால் வந்த காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பினார்.

    இதையடுத்து போலீஸார் காரை சோதனை செய்தபோது, அதில் 11 செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. ஒரு டன் எடைக்கொண்ட அந்த செம்மரங்களின் மதிப்பு ரூ.10 லட்சம்.

    பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai