சுடச்சுட

  

  திருத்தணி அருகே தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மூலம் இயங்கி வந்த உணவகம், விடுதிக்கு சுற்றுலாத்

  துறையினர் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.

  சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் முருக்கம்பட்டு பகுதியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் உணவகம், விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இவை, கடந்த 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியாருக்கு ஏலம் விடப்படும்.

  அந்த வகையில், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு திருத்தணியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உணவகம், விடுதிக்கு ஏலம்விடப்பட்டது.

  5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஒப்பந்ததாரர், சுற்றுலாத்துறைக்கு ரூ.40 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.

  குத்தகைத்தொகை செலுத்தாததால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் ஆதித்யன், உதவிப் பொறியாளர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் உணவகம், விடுதிக்கு சீல் வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai