சுடச்சுட

    

    வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள்

    By திருவள்ளூர்  |   Published on : 11th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தினார்.

    வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசியது: மாவட்டத்தில் கனத்த மழை, வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் பொதுமக்களை பாதுகாப்பது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

    பொதுப்பணித்துறையினர் ஆறு, ஏரிகளின் கரைகளின் உறுதித்தன்மை பாதுகாப்பான முறையில் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களில் தேவையான மணல் மூட்டைகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்புத்துறை தேவையான ரப்பர் படகுகள், மிதவைக் கருவிகள், இதர உயிர்காக்கும் உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    நகராட்சிகளில் மழைநீர், கழிவுநீர் உடனடியாக வெளியேற்ற வேண்டிய நடவடிக்கைகள் அவசியம். மேலும், தடையின்றி மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகாலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான போதிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான பட்டியலையும், போக்குவரத்து வசதி, அனைத்து அத்தியாவசிய மருந்துகள் கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை தயார் இருக்க வேண்டும்.

    வெள்ளம், கனமழை, பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    கூட்டத்தில் திருவள்ளுர் துணை ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காசி, அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai