சுடச்சுட

  

  திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பவித்ர உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவ விழா திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

  இதையொட்டி, விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணியளவில், உற்சவர் வீரராகவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் யாக சாலையில் ஹோமம் பூஜை நடைபெற்றது.

  மாலை 6 மணியளவில், கோயிலின் மாட வீதிகளில் உற்சவவர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  நிகழ்ச்சியில் திருவள்ளூர், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்த பவித்திர உற்சவ விழா வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர்

  தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai