சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் "அம்மா' திட்ட முகாம் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

    முகாம் நடைபெறும் இடங்கள்: திருவள்ளுர் வட்டம், வெங்கல் வருவாய் கிராமம் - அப்பகுதி கிராம நிர்வாக அலுவலக வளாகம். பூந்தமல்லி வட்டம், உடையவர்கோவில் வருவாய் கிராமம் - அப்பகுதி சமுதாயக்கூடம்.

    பொன்னேரி வட்டம், திருவெள்ளவாயல் வருவாய் கிராமம் - அப்பகுதி சமுதாயக்கூடம்.

    கும்மிடிப்பூண்டி வட்டம், பூதூர் வருவாய் கிராமம் - பூதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. திருத்தணி வட்டம், தாடூர் வருவாய் கிராமம் - அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகம்.

    பள்ளிப்பட்டு வட்டம், வீரமங்கலம் வருவாய் கிராமம் - வீரமங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai