சுடச்சுட

  

  அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்டது அம்மையார்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு ஆகிய 2 தெருக்களில் வசிப்பவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

  இந்நிலையில், அம்மையார்குப்பம் கிராமத்தில் ஜாத்திரைத் திருவிழா செவ்வாய், புதன்கிழமை நடைபெற்றது.

  அப்போது அந்த இரண்டு தெருக்களைச் சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

  தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீஸார் அங்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஹரிஹரன் என்ற போலீஸார் காயமடைந்தார்.

  இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

  மேலும், இதுதொடர்பாக காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணப்பன், ஏழுமலை, பூவரசன், வெங்கடேசன், கோபால், சம்பந்தன், ரமேஷ், குமரன், குமார், ரவிக்குமார் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai