சுடச்சுட

  

  சாலையோரக் கடைக்குள் புகுந்த லாரி: ஒருவர் சாவு

  By திருவள்ளூர்,  |   Published on : 12th September 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அருகே செங்கல் லோடு ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

  ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை புத்தூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (35) ஓட்டிச் சென்றார். புத்தூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கிளீனர் ராஜேந்திரன் (55), செங்கல் இறக்குவதற்காக கொடிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமு (30), வழிப்போக்கர் ஸ்ரீராம் (55) உள்பட 6 பேர் லாரியில் இருந்தனர்.

  இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும்போது எதிர்பாராதவிதமாக லாரியில் பிரேக் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, மணவாளநகர் இந்திரா சிலை அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, பின்னர் பூட்டிக்கிடந்த கடைக்குள் புகுந்தது.

  அப்போது லாரியில் இருந்த மூன்று பேர் வெளியே குதித்து தப்பினர். இந்த விபத்தில் ஓட்டுநர் சுதாகர், கிளீனர் ராஜேந்திரன், கூலித்தொழிலாளி ராமு, ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஸ்ரீராம் உயிரிழந்தார்.

  இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai