Enable Javscript for better performance
சீனிவாசபெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சம்ப்ரோஷணம்- Dinamani

சுடச்சுட

    

    சீனிவாசபெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சம்ப்ரோஷணம்

    By திருவள்ளூர்  |   Published on : 12th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீனிவாசபெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்ற சம்ப்ரோஷனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தற்போது ரூ.20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 60 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழக்கிழமை காலை சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன. காலை 8.40 மணியளவில் மகா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மாலையில் சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் கடம்பத்தூரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் கடம்பத்தூர், கசவநல்லாத்தூர், வெண்மனம்புதூர், ஸ்ரீதேவிக்குப்பம், செஞ்சி, திருப்பாச்சூர், திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai