சுடச்சுட

  

  துரிதமாக நடந்து வரும் "அம்மா' உணவகக் கட்டடப் பணிகள்

  By திருவள்ளூர்,  |   Published on : 12th September 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அரசு மருத்துவமனை, பெரியகுப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் அம்மா உணவகக் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

  தமிழக அரசின் அம்மா உணவகத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையத்தில் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, பெரியகுப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

  இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு அங்கு கட்டடப் பணி தொடங்கியது.

  தற்போது, அங்கு 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக ஒரு உணவகத்துக்கு பணியில் ஈடுபட 12 நபர்கள் என மகளிர் சுயஉதவிக் குழுவினரில் இருந்து ஆள்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி, இன்னும் சில வாரங்களில் இந்த அம்மா உணவகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai