சுடச்சுட

    

    தேமுதிக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக கிருஷ்ணமூர்த்தி நியமனம்

    By திருவள்ளூர்,  |   Published on : 12th September 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதை அக்கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அருண்சுப்பிரமணியம், அதிமுகவில் இணைந்ததை அடுத்து, கடந்த ஓராண்டாக அந்த பதவியிடம் காலியாக இருந்தது.

    இந்நிலையில், மாவட்ட அவைத்தலைவர் பதவி வகித்து வந்த திருத்தணியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை தேமுதிக தலைமை அண்மையில் வழங்கியது.

    இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் திருவள்ளூருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பின்னர், ஆயில்மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், மணவாளநகரில் உள்ள இந்திராகாந்தி சிலை, அண்ணா சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியின்போது மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சேகர், நிஜாமுதீன், ஒன்றிய நிர்வாகிகள் மகேஷ்பாபு, தியாகராஜன், தென்னரசு, சுந்தரபாண்டியன், ரஜினிகாந்த், பாஸ்கர்ராஜ், கோட்டீஸ்வரன், நகர நிர்வாகிகள் பாலச்சந்தர், வேலு, சுப்பிரமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai