சுடச்சுட

  

  பூந்தமல்லி அருகே மயங்கி விழுந்த மலேசியாவைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

  மலேசியாவைச் சேர்ந்தவர்கள் சரவணன் (32), ரீஷ்யாத் (27). இருவரும் நண்பர்கள்.

  இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். பனையூரில் உள்ள தங்களின் நண்பர் கணேஷ் என்பவரின் வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர்.

  இருவரும் கடந்த செவ்வாய்கிழமை இரவு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மது விருந்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில், புதன்கிழமை காலையில் கணேஷை கைப்பேசியில் தொடர்புகொண்ட அவர்கள், தாங்கள் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை புறவழிச்சாலையில் இருப்பதாகவும், தங்களுக்கு மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளனர்.

  இதையடுத்து, சிறிது நேரத்தில் கணேஷ் அங்கு வந்து மயக்கநிலையில் இருந்த இருவரையும் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

  ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai