சுடச்சுட

  

  திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், ஒருகிங்ணைந்த விளையாட்டு அரங்க முதன்மைச் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி மையம் அமையவும், நீச்சல் குளம், சிறகுப்பந்து ஆடுகளம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்க முதன்மைச் செயலாளர் வி.கே. ஜெயக்கொடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

  மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் கோ.மதிமாறன், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் பெரியகருப்பன், விளையாட்டுப் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai