Enable Javscript for better performance
மின்சார ரயில்களில் சோதனை: மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மின்சார ரயில்களில் சோதனை: மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 12th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி மார்கமாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் மின்சார ரயில்களில் சோதனை நடத்திய மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் மூன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் உத்தரவின்பேரில் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்கமாக செல்லும் மின்சார ரயில்களில் மாவட்ட வழங்கல் ஆய்வாளர் நித்யானந்தம் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, பல ரயில் பெட்டிகளில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் சிறிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிப்பட்டன.

    அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai