சுடச்சுட

  

  ஸ்ரீதிருமாலி, வேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

  By திருவள்ளூர்  |   Published on : 12th September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புங்கத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ திருமாலி அம்மன், வேம்புலி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட புங்கத்தூரில் அமைந்துள்ளது திருமாலி அம்மன், வேம்புலி அம்மன் கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்பமரத்தின் நடுப்பகுதியின் மேல் வேர் ஊன்றி அரசமரம் வளர்ந்து வருகிறது.

  தல விருட்சம் வேப்ப மரமாகிய அம்மனும், அரச மரமாகிய சிவனும் இணைந்துள்ளது இந்தக் கோயிலின் சிறப்பு.

  மேலும், இந்தக் கோயிலில் வலம் வருபவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், புத்திரப் பாக்கியம் ஏற்படும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

  இந்த சிறப்பம்சம் கொண்ட கோயிலில் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

  விழாவையொட்டி புதன்கிழமை முதல் நாகு கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

  வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மகா சங்கல்பமும், 8 மணியளவில் சிறப்பு ஹோம பூஜையும் நடைபெற்றது.

  காலை 9.30 மணியளவில் புனித நீர் அடங்கிய கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதையடுத்து, மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புங்கத்தூர், ஜெயாநகர், சேலை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர்

  பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai