சுடச்சுட

    

    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

    By திருவள்ளூர்,  |   Published on : 13th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில தொடக்கக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் அறிவுடைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருப்பாச்சூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

    கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுந்தரராஜன், பள்ளிக்கல்வித் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொடக்கக்கல்வி இணை இயக்குநர் லதா பங்கேற்று பேசினார். அப்போது அவர், மாவட்டத்தில் உள்ள 14 உதவித் தொடக்க அலுவலர்கள், அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் பள்ளிகளில் தமிழ் எழுத, படிக்கத் தெரியாத மாணவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களைக் கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் எழுத, படிக்கத் தெரியாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களது கற்றல் அடைவுத்திறன் மேம்பட தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் அனைத்து உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai