சுடச்சுட

    

    உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 13th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கும்மிடிப்பூண்டி வட்டத் தலைவர் ஆர்.சாமிநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.பூபாலன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உரையாற்றினார்.

    கோரிக்கைகள்: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    பணிப் பதிவேடு அட்டையை பராமரிக்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai