சுடச்சுட

    

    மீன்பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உடன் சென்ற நண்பரை அடித்துக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

    வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் கடந்த 28.05.2011 அன்று அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48), ஷாஜி (47) ஆகியோருடன் அயப்பாக்கம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது.

    இதில் குமார், ஷாஜி ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், அதே இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீஸார் குமார், ஷாஜி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-3 இல் நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குமார், ஷாஜி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் அந்தமான் முருகன் ஆஜராகினார்.

    கடந்த 1-ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு 10 நாள்களில் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai