சுடச்சுட

  

  திருவள்ளூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா ஆதரவற்றோர் பள்ளியில் கிராமங்களுக்கான சேவா ரதம் தொடக்க விழா, நல்லொழுக்கக் கல்வி நூல் வெளியீட்டு விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.

  நிகழ்ச்சிக்கு சேவாலயா நிர்வாக அறங்காவலர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் பாரதி, காந்தி, விவேகானந்தர் விழாவும் கொண்டாடப்பட்டது.

  விழாவில் சேவாலயாவின் நல்லொழுக்கக் கல்வி நூலான "நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்' என்ற ஆங்கில் மொழிப் பெயர்ப்பு நூலை சுவாமி

  ஓம்காரனந்தா வெளியிட, ஏ.எம்.எம். அறக்கட்டளை நிறுவன நிர்வாக அறங்காவலர் சுப்பையா பெற்றுக் கொண்டார்.

  நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் சேவா ரதமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சுற்றி வந்து ஏழை கிராம மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கும் என முரளிதரன் தெரிவித்தார். புலியூர் ஊராட்சித் தலைவர் சீனிவாசன் நன்றிக் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai