சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் 15 லட்சம் மரக்கன்றுகளை நட ஏற்பாடு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 13th September 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 15 லட்சம் மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ராமசந்திராபுரத்தில் உள்ள மத்திய நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, இந்த மையத்தில் மலை நாவரசு, மகாகனி, புங்கன், பூவரசு, தேக்கு உள்ளிட்ட 15 வகையான 1 லட்சத்து 31 ஆயிரத்து 120 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.

    இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். விழாவுக்கு மாவட்ட வன அலுவலர் முகமது ஷபாப் தலைமை வகித்தார். வனச்சரகர் தெய்வசர்மா வரவேற்றார்.

    கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யநாராயணமூர்த்தி, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆட்சியர் பேசியது: ராமசந்திராபுரம் நர்சரியில் பயிரிடப்பட்டுள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 120 மரக்கன்றுகளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், தொழில் நிறுவனங்களில் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், முதல்வரின் உத்தரவுபடி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரத்தை நட்டு வளர்க்க மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலையோரங்கள், ஏரி, குளக்கரைகளில் 15 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து, அவரவர் வீடுகள், நிறுவனங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார் அவர்.

    மாநெல்லூர் ஊராட்சித் தலைவர் கோபி, மாதர்பாக்கம் ஊராட்சித் தலைவர் பல்லவி ரமேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai