சுடச்சுட

    

    துணை சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி சாலை மறியல்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 13th September 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதலம்பேட்டில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள துணை சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழுதலம்பேடு பகுதியில் 1999-ஆம் ஆண்டு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 6 ஆண்டுகள் செயல்பட்ட இந்த சுகாதார நிலையம், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை.

    இதனால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் ஆகியோர் அவசர மருத்துவ உதவி பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதனைக் கண்டித்தும், துணை சுகாதார நிலையத்தை உடனே திறக்கக்கோரியும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்த அரசுப் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்த வழுதலம்பேடு ஊராட்சித் தலைவர் நந்தகோபால் அங்கு வந்த பொதுமக்களை பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்தார்.

    இதையடுத்து, கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மோகனசுந்தரம், வட்டார மருத்துவர் ராம்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, துணை சுகாதார நிலையம் இன்னும் 3 மாதங்களில் திறக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai