சுடச்சுட

  

  பாதுகாப்புத் துறை சார்பில் போர் ஊர்திகள் விழிப்புணர்வுக் கண்காட்சி

  By திருவள்ளூர்  |   Published on : 13th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆவடியில் உள்ள இந்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு போர் ஊர்திகள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகச் செயலாளர் பாரிவேந்தர் தலைமை வகித்தார். ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

  சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இஸ்ரோ தலைவரும், விண்வெளிக் குழுமத்தின் மத்திய அரசு செயலாளருமான கஸ்தூரிரங்கன், தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மைக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

  கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களான ஹைதராபாத்தில் உள்ள ஆர்.சி.ஐ, டி.ஆர்.டிஎல், பெங்களூரில் உள்ள எல்.ஆர்.டி.இ, ஆவடியில் உள்ள சி.வி.ஆர்.டி.இ. ஆகியவை தங்களது கண்டுபிடிப்புகளை நிறுவி விளக்கவுரை நிகழ்த்தின.

  இதில் பேராசிரியர்கள் நாராயணராவ், முத்தமிழ்ச்செல்வன், ரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். கண்காட்சியில் ப்ருத்வி, ஆகாஷ், ப்ரம்மோஸ், நாக், அஸ்த்ரா, அக்னி

  ஏவுகணை மாதிரி வடிவங்களும், பல்வேறு வகையான பரணி, ரோஹிணி உள்ளிட்ட ரேடார்களின் மாதிரிகளும், போர் ஊர்திகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

  குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் போர் ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai