சுடச்சுட

    

    புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்தும் சாலை அமைக்கப்படாததால் மக்கள் அவதி

    By திருவள்ளூர்  |   Published on : 13th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரை அடுத்த பூங்காநகர் பிரதானச் சாலையில் புதைச் சாக்கடைப் பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த ஆயில்மில் பகுதியில் இருந்து பூங்கா நகர் செல்லும் பிரதானச் சாலை உள்ளது. இந்தச் சாலையில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்தச் சாலை வழியாகவே பூங்கா நகர், ஆசிரியர் குடியிருப்பு, ராஜாஜிபுரம், காக்களூர், புட்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தச் சாலையில் புதைச்சாக்கடைப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் அந்தப் பகுதியில் புதிய சாலைகள் போடப்படவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது.

    இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், லேசான மழை பெய்தாலே அந்தச் சாலை முழுவதும் தண்ணீர் நிரம்பி சேறாகிவிடுகிறது.

    இதன் காரணமாக, அவ்வழியே செல்லும் கார், வேன் போன்ற வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடுகின்றன.

    இதுகுறித்து, திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் கூறியது:

    புதைச் சாக்கடைப் பணி முடிவடைந்த பூங்காநகர் பிரதான சாலை, பாலவிநாயகர் நகர், பெருமாள்செட்டித் தெரு உள்ளிட்ட 30 தெருக்களுக்கு சாலை அமைக்க ரூ.10 கோடி மதிப்பீடு செய்து நிதி கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் உடனடியாக சாலைகள் சீரமைக்கப்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai