சுடச்சுட

    

    மாதவரம் அருகே பெண்ணிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சென்னை கொடுங்கையூர் ஜம்புலி காலனியைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி காஞ்சனா (37).

    இவர், கடந்த திங்கள்கிழமை இரவு மாதவரம் - மூலக்கடை சந்திப்பு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காஞ்சனா கழுத்திலிருந்த 9 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai