சுடச்சுட

    

    மண் குவாரியில் மாமூல் கேட்டு மிரட்டல்: இருவர் கைது

    By திருவள்ளூர்,  |   Published on : 13th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே இயங்கி வரும் மண் குவாரியில் மேற்பார்வையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த நேமம் ஏரியில் அரசு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, ஜெயபால் பணியில் இருந்தபோது, மண்ணூரைச் சேர்ந்த சுதாகர் (36), குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற சுப்பிரமணி (49) ஆகியோர் அங்கு சென்று தங்களுக்கு மாமூல் தரும்படி கேட்டு மிரட்டினராம். ஆனால் பணம் தர ஜெயபால் மறுத்துள்ளார்.

    இதையடுத்து, அவர்கள் ஜெயபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுதாகர், சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai