Enable Javscript for better performance
முள்புதர் சூழ்ந்து காணப்படும்மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்- Dinamani

சுடச்சுட

    

    முள்புதர் சூழ்ந்து காணப்படும்மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

    By திருவள்ளூர்,  |   Published on : 13th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் பின்புறம் முள்புதர் சூழ்ந்து காணப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அந்த அலுவலகத்தின் பின்புறம், முள்புதர் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதியில் திரியும் விஷ ஜந்துக்கள் மாற்றுத்திறனாளிகளை தீண்டும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைச் சுற்றியுள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai