சுடச்சுட

    

    "அம்மா' திட்டத்தில் 10 மனுக்களுக்கு தீர்வு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 14th September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பூதூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 33 மனுக்கள் பெறப்பட்டு அவற்றுள் 10 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்தத் திட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. திட்ட முகாமுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.உஷா நந்தினி, ஒன்றிய கவுன்சிலர் காமாட்சி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முனிவேல் வரவேற்றார்.

    முகாமில், கும்மிடிப்பூண்டி தனி வட்டாட்சியர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் வீட்டு மனைப் பட்டா கோருதல், குடும்ப அட்டை திருத்தம், நீக்கல், முதியோர் உதவித்தொகை, சான்றிதழ்கள் கோருதல் உள்ளிட்ட 33 மனுக்களை அளித்தனர்.

    தொடர்ந்து முகாமில் 10 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உரிய ஆவணங்கள் தரப்பட்டன. எஞ்சியுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai