சுடச்சுட

    

    "அம்மா' திட்ட முகாமில் 24 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

    By திருத்தணி,  |   Published on : 14th September 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊராட்சியில் நடந்த "அம்மா' திட்ட முகாமில், 24 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில், கிராமங்களைத் தேடி வருவாய்த் துறையினர் என்கிற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருத்தணி வட்டாட்சியர் ரமேஷ், சமூக நலத் துறை வட்டாட்சியர் லட்சுமணன், வட்ட வழங்கல் அலுவலர் முனியசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.

    இதில், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி, மொத்தம், 125 மனுக்கள் கொடுத்தனர்.

    இதில், 24 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணை, வழங்கப்பட்டது.

    தகுதியில்லாத, 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 71 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai