Enable Javscript for better performance
அரசு பொது மருத்துவமனையை சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசு பொது மருத்துவமனையை சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு

    By திருத்தணி,  |   Published on : 14th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பொது மருத்துவனையை சுகாதார மேலாண்மை திட்ட இயக்குநர் சண்முகம் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் இயங்கி வருகிறது அரசுப் பொது மருத்துவமனை.

    இந்த மருத்துவமனைக்கு திருத்தணியைச் சுற்றியுள்ள 40 கிராமங்களில் இருந்து தினசரி 500-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் சனிக்கிழமை தமிழ்நாடு சுகாதாரப் பணிகள் மேலாண்மை திட்ட இயக்குநர் சண்முகம், மாவட்ட இணை இயக்குநர் மோகனன் ஆகியோர் திருத்தணி அரசு பொது மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தனர்.

    இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டப் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, சமையல் அறை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

    பின்னர் மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்தனர். அப்போது நோயாளிகள் கூறியது:

    மருத்துவமனையில் நீண்ட நாள்களாகவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இரவில் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் அனைத்து நோயாளிகளை கவனிக்க முடியவில்லை.

    மேலும் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை இருந்து வருகிறது. மின்வெட்டு ஏற்படும் போது நோயாளிகள் கடும் அவதிப்பட வேண்டியுள்ளது.

    ஒரு சில வார்டுகளில் மின்விசிறிகள் கிடையாது என இயக்குனரிடம் நோயாளிகள் புகார் கூறினர்.

    இதை கேட்டறிந்த சுகாதார மேலாண்மை திட்ட இயக்குநர் சண்முகம், "மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என்றார்.

    இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai