சுடச்சுட

    

    எல்லையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருத்தணி நகராட்சி, 20-ஆவது வார்டில் அமைந்துள்ளது அண்ணாநகர் (குண்டலுôர்). இந்தப் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலை, அப்பகுதிவாசிகள் புதுப்பித்து வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவை ஒட்டி, கோயில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நான்கு கால யாகபூஜைகள் நடந்தது.

    காலை, 9 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, கோயில் விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிற்பகல் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில், அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினர் திருத்தணி கோ. அரி, கவுன்சிலர் கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai