சுடச்சுட

  

  சோழவரம் அருகே தனியார் வீட்டுச் சுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

  சோழவரம் காவல் நிலைய எல்லைகுள்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் வசித்து வருபவர் முருகன்.

  இவர் தனியார் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். முருகனின் மகன் ஜெகந்நாதன் (11), பாடியநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

  முருகன் வீடு அருகில் தனியார் ஒருவர் வீடு கட்டுவதற்காக 6 அடி உயரத்தில் சுவர் எழுப்பியுள்ளார்.

  தற்போது வீடு கட்டும் பணிகள் நடைபெறாத நிலையில் ஜெகந்நாதன் சுவரின் மீது ஏறி விளையாடியுள்ளார்.

  அப்போது சுவர் லேசாக ஆட்டம் கண்டுள்ளது. இதனால் சுவரின் மீது அமர்ந்திருந்த ஜெகந்நாதன் பயந்து கீழே குதித்துள்ளான்.

  அப்போது சுவர் திடீரென இடிந்து ஜெகந்நாதன் மீது விழுந்துள்ளது. இதில் சுவரில் அடியில் சிக்கிக் கொண்ட ஜெகந்நாதனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு பாடியநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai