சுடச்சுட

    

    கொதிகலன் வெடித்த சம்பவம்: மேலும் ஒருவர் சாவு

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 14th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் கொதிகலன் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர், சனிக்கிழமை உயிரிழந்தார்.

    இந்த உருக்காலையில் திங்கள்கிழமை மாலை வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திடீரென கொதிகலன் பகுதியில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக கொதிகலன் வெடித்து, அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே தெரித்தன. இதையடுத்து அதன் அருகில் வேலை செய்து கொண்டிருந்த கிரேன் இயக்குபவர்களான பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகேஷ்வரின் மகன் திரேந்தர் (30), உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சௌத்ரியின் மகன் பட்டு சௌத்ரி (30) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    தொடர்ந்து இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திரேந்தர் உயிரிழந்தார்.

    அதைத் தொடர்ந்து சனிக்கிழமை பட்டு சௌத்ரியும் இறந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai